Enable Javscript for better performance
\\\"சாகச\\\' பைக் பயணம்: 9 பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    உயர் பாதுகாப்பு நிறைந்த இந்தியா கேட் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில், சாகசம் நிகழ்த்துவதுபோல் மோட்டார் சைக்கிளை அசுர வேகத்தில் தாறுமாறாக ஓட்டிச் சென்ற 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்தியா கேட் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிலர் சாகசத்தில் ஈடுபடுவது போன்று அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் திலக் மார்க், ஹனுமான் ரோடு, அக்பர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாகச பயணத்தில் ஈடுபட்டதால் அப் பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு பெருத்த இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீஸார் அப் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாலை விதிகளை மீறும் வகையில் அசுர வேகத்தில் மோட்டார்சைக்கிள்களை ஓட்டியதாக 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

    இதுகுறித்து தில்லி காவல் துறையின் (புது தில்லி) துணை ஆணையர் எஸ்.பி.எஸ். தியாகி கூறுகையில், "இந்தியா கேட் பகுதியில் 36 டாக்ஸி உள்பட மொத்தம் 288 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், சாலை விதிகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என்றார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புது தில்லி மாவட்டத்தில் ஆபத்தான வகையில் சாகசப் பயணம் மேற்கொண்ட சிலர் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 19 வயது இளைஞர் உயிரிழந்தார். உடன் சென்ற அவரது நண்பர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai