Enable Javscript for better performance
தில்லிக்கு ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை?- Dinamani

சுடச்சுட

    

    தில்லிக்கு ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை?

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் ஆட்சியின் போது தில்லிக்கு ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

    இது குறித்து பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜய் கோயல் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் 5 கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

    மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை ஏன் உருவாக்கவில்லை?

    தில்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இருந்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை ஏன் முழுமையாகச் செலவிடவில்லை. செலவிடப்படாமல் உள்ள மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து ராகுல் காந்தியின் பதில் என்ன?

    தில்லியின் சட்டம் - ஒழுங்கு மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தில்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது. தில்லியின் சட்டம் - ஒழுங்குக் குறித்து ராகுல் காந்திக்கு அக்கறை இல்லையா?

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு வழக்கில் தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக ஆதாரம் இருந்தும், கேரள ஆளுநராக நியமித்தது ஏன்?

    மக்களவையில் தில்லி தொடர்பான பிரச்னைகளை எத்தனை முறை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்? இது போல தில்லி பிரச்னைகளை காங்கிரஸ் எம்.பி.க்களும் ஏன் எழுப்பவில்லை?

    மக்களவையில் வருகைப் பதிவில் ராகுல் காந்தியின் மொத்த வருகை 42 சதவீதம்தான்.

    தில்லி மாநகரின் மேம்பாட்டுக்காக காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால், தில்லியின் அங்கீகாரமற்ற காலனிகள், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந் நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இதற்குரிய தண்டனையை காங்கிரஸýக்கு மக்கள் வழங்குவார்கள் என்றார் விஜய் கோயல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai