Enable Javscript for better performance
தில்லி வேட்பாளர்களில் 50 பேர் கோடீஸ்வரர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லி வேட்பாளர்களில் 50 பேர் கோடீஸ்வரர்கள்!

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 150 வேட்பாளர்களில் 50 பேர் கோடீஸ்வரர்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    சொத்து மதிப்பு ரூ. 114 கோடியுடன் மத்திய அமைச்சர் கபில் சிபல் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ரூ. 100-ஐ சொத்து மதிப்பாகக் கொண்டுள்ள சம்யக் பரிவர்த்தன் கட்சி வேட்பாளர் ராமானுஜ படேல் மிகவும் ஏழ்மையான வேட்பாளர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தில்லி தேர்தல் கண்காணிப்பு மையம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தில்லியில் போட்டியிடும் 150 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தில்லி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 3.09 கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மஹாபல் மிஸ்ரா ரூ. 38 கோடி, புது தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் மீனாட்சி லேகி ரூ. 34 கோடி சொத்து மதிப்பைக் கொண்டு கபில் சிபலுக்கு அடுத்தப்படியாக உள்ளனர்.

    தில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாஜக, ஆம்ஆத்மி கட்சியின் 6 வேட்பாளர்கள் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பும் ரூ. 1 கோடியைத் தாண்டியுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    கட்சி ரீதியாக காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 28.29 கோடி, பாஜக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 12.60 கோடி, ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களின் சொத்து மதிப்ப ரூ. 3.01 கோடியும் உள்ளது.

    தில்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் 150 வேட்பாளர்களில் மொத்தம் 50 வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

    பாஜக வேட்பாளர்கள் வடகிழக்கு தில்லி மனோஜ் திவாரி-ரூ. 3.46 கோடி, மேற்கு தில்லி பர்வேஷ் வர்மா-ரூ. 2.66 கோடி, சாந்தினி செüக் ஆம்ஆத்மி வேட்பாளர்- ஆசுதோஷ் ரூ. 1.11 கோடி எனத் தெரியவந்துள்ளது.

    வேட்பாளர்களில் 23 பேரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சமாகும். ரூ. 1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டவர்களில் 6 பேர் தங்களின் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மொத்தமுள்ள 150 வேட்பாளர்களில் 16 பேர் பான் எண் குறிப்பிடவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    ஆய்வில் வேட்பாளர்களின் படிப்பறிவு குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டது. தில்லியில் போட்டியிடும் வேட்பாளர்களில் 77 பேர் பிளஸ் 2 வரை படித்துள்ளனர். 65 பேர் பட்டப்படிப்பை முடித்துள்னர். 4 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மேலும், வயது வரம்பில் 25 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 97 பேர், 51 முதல் 80 வயதுடையவர்கள் 51 பேர் உள்ளனர். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 13 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai