Enable Javscript for better performance
பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: \\\"மைனர்\\\' சிறார் கைது- Dinamani

சுடச்சுட

    

    பணத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு: "மைனர்' சிறார் கைது

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணத்துக்காக கடத்தப்பட்ட 12 வயது சிறுவனை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக "மைனர்' சிறார் கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் அஜய் குமார் வெள்ளிக்கிழமை கூறியது:

    கிழக்கு தில்லி, வினோத் நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் கடந்த மார்ச் 30- ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தார். அதில் தனது இளைய மகனுடன் அம்பேத்கர் பார்க்கில் மதியம் விளையாடச் சென்ற மூத்த மகன் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மந்தாவெளி காவல் நிலையத்தில் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுவனைத் தேடும் பணி தொடங்கியது.

    இந் நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி சுனில் குமாரின் குடும்பத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ரூ. 50,000-ஐ கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக அதில் பேசியவர் தெரிவித்தார். அந்த அழைப்பு ஒரு பொதுத் தொலைபேசி பூத்திலிருந்து வந்துள்ளது. அங்கு சென்று விசாரித்த போது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    இந் நிலையில், பணத்தை சராய் காலேகான் பஸ் நிலையம் அருகே கொண்டு வந்து கொடுக்கும்படி சிறுவனைக் கடத்திச் சென்றிருந்தவர் ஏப்ரல் 2-ஆம் தேதி கூறினார். இதையடுத்து, சிறுவனின் குடும்பத்தாருடன் போலீஸ் படையினர் அங்கு சென்றனர். ஆனால், அவர் அங்கு வராமல், ஆனந்த் விஹார் பஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினார். இதன்படி அங்கு சென்றதும் மீண்டும் இடத்தை மாற்றினார்.

    அப்போது கௌசாம்பியில் உள்ள டாபர் செüக் பகுதிக்கு வரும்படி கூறினார். இதையடுத்து, அங்கு சென்றதும், சிறுவனுடன் வந்த "மைனர்' சிறார் கைது செய்யப்பட்டார். அச் சிறுவனை புது தில்லி ஐடிஓ பகுதியில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது என்று காவல் துணை ஆணையர் அஜய் குமார் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai