Enable Javscript for better performance
பள்ளியில் தொடங்கியது பயங்கரவாதிகள் நட்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அசாதுல்லா அக்தர், முகமது அதீஃப் அமீன் ஆகியோர் பள்ளியிலேயே நட்புடன் இருந்ததாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    தில்லியில் 2008, செப்டம்பர் 13, கிரேட்டர் கைலாஷ், கரோல் பாக் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இரு குற்றப்பத்திரிகையை தனிப்பிரிவு போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். தற்போது வெளியாகியுள்ள அதன் விவரம் வருமாறு:

    2008-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் அசதுல்லா அக்தர், முகமது அதீஃப் அமீன் உள்பட 29 பேர் மீது தனிப்பிரிவு போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அசதுல்லா அக்தருக்கும் முகமது அதீஃப் அமீனுக்கும் இடையே ஏற்பட்ட ஆரம்ப கால பழக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள கூடுதல் விவரம் வருமாறு:

    கரோல் பாக், கிரேட்டர் கைலாஷ் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கியப் பயங்கரவாதிகள் மிர்ஸா சகாதேப் பெக், அரிஸ் கான் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மற்ற பயங்கரவாதிகள் முகமது ஹக்கீம், ஜீஷான், ஷஜாத் மற்றும் ûஸய்ஃபூர் ரகுமான் ஆகியோர் உத்தர பிரதேச மாநிலம், ஆசம்கர் மாவட்ட பள்ளியில் படித்தனர். 1991-ஆம் ஆண்டு அப் பள்ளியில் அசதுல்லா அக்தர் சேர்ந்தார். அருகே உள்ள பள்ளியில் முகமது அதீஃப் படித்து வந்தார். அவருடன் அமீனுடன் அக்தருக்கு நட்பு ஏற்பட்டது. 11-ஆவது வகுப்பு வரை அக்தர் படித்தார்.

    இக் குழுவினர் "சிமி' இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருந்தனர். காஷ்மீர் பிரிவினை, பாபர் மசூதி சம்பவம், ஜிகாத் உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் அவ்வப்போது விவாதிப்பர். இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவர்கள் நீண்ட நாள்களாகத் திட்டம் தீட்டினர்.

    அதில் ஒரு பகுதியாக கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 2008, செப்டம்பர் 13-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். அதில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

    அதே நாளில், கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸார் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், அதீஃப் அமீன் மூலம் அசார் ஷபீர் என்பவருடன் அக்தருக்கு தொடர்பு ஏற்பட்டது. அமீன் மற்றும் இந்திய முஜாஹிதீன் அமைப்பினர், அக்தரையும் இணைத்துக் கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டனர். இதற்காக தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்த கும்பல் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். அவர்களைப் பிடிக்கும் முயற்சியில்தான் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. அதில் அதீஃப் அமீன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்' என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai