Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: தில்லி தூதராக காமெடி நடிகர் கபில் சர்மா நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: தில்லி தூதராக காமெடி நடிகர் கபில் சர்மா நியமனம்

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காமெடி நடிகர் கபில் சர்மாவை தில்லி தூதராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் நடிகர் கபில் சர்மா பேசுகையில், "ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க முன்வர வேண்டும்.

    வாக்களிப்பு உரிமைகளையும் அதன் அவசியத்தையும் மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்களித்து சரியான நபர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சக்தி வாய்ந்த ஜனநாயகத்தை உருவாக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

    தில்லி தலைமை தேர்தல் அதிகாரி விஜய் தேவ் கூறுகையில், "வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    குறிப்பாக, தில்லி கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடம் சிறப்பு வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    தேர்தலை மக்கள் திருவிழா போல் எண்ணி, வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றார்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் ஹிந்தி நடிகை சோஹா ஹலி கான் ஆகியோர் வரிசையில் இப்போது நடிகர் கபில் சர்மாவும் தில்லி தேர்தல் ஆணைய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai