Enable Javscript for better performance
முசாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட வர்களை அவமானப்படுத்துகிறது உ.பி. அரசு: பாஜக தாக்கு- Dinamani

சுடச்சுட

    

    முசாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட வர்களை அவமானப்படுத்துகிறது உ.பி. அரசு: பாஜக தாக்கு

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முசாஃபர்நகர் பகுதியில் "மதச்சார்பற்ற சுற்றுலா' என்ற பெயரில் உத்தர பிரதேச அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாஜக துணைத் தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளரும் முக்தார் அப்பாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேச அரசு சார்பில் "மதசார்பற்ற சுற்றுலா' என்ற பெயரில் முசாஃபர்நகரில் பாதிக்கப்பட்ட மக்களைக் காண செல்வது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். இந்த விஷயத்தில் ஹிந்து அல்லது முஸ்லிம் என்பது கேள்வியல்ல.

    மாநில அரசு, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் மருந்து தடவுவதற்குப் பதிலாக, உப்பைத் தேய்த்துவருகிறது. இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர்.

    அவர்கள் அனைவரும் கட்சியின் ஆதரவாளர்கள்தான். இந்த அவமானகரமான செயலுக்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.

    முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷா முசாஃபர்நகர் காந்தி காலனியில் குஜ்ஜார்கள், ராஜ்புத் மற்றும் தலித் சமுதாய மக்களிடையே பேசுகையில், "ஒரு மனிதன் உணவு மற்றும் தூக்கமின்றி கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், அவமானப்படுத்தப்பட்டால் வாழ முடியாது. இதற்கு நிச்சயம் நாம் பதிலடி தர வேண்டும்' என்றார்.

    அதுபோல் மற்றொரு இடத்தில் ஜாட் சமூக மக்களை சந்தித்து அமித் ஷா பேசுகையில், "இத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த அரசை வெளியேற்றவும் கலவரத்தில் கொல்லப்பட்ட ஜாட் இனத்தவர்களைப் பாதுகாக்கவும் நஷ்டஈடு பெற்றுத் தரவும் முடியும்' என்றார்.

    அமித் ஷாவின் இப் பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai