Enable Javscript for better performance
\\\"மோடி மீதான மக்கள் நம்பிக்கை பாஜக வெற்றிக்கு கைகொடுக்கும்- Dinamani

சுடச்சுட

    

    "மோடி மீதான மக்கள் நம்பிக்கை பாஜக வெற்றிக்கு கைகொடுக்கும்

    By 'புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி மீது தில்லி மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது எங்கள் கட்சியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    இது குறித்து அக் கட்சியின் தில்லி பிரதேச தேர்தல் பிரசார குழுத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    மக்களவைத் தேர்தலுக்காக பாஜக தொண்டர்கள் கடந்த 15 நாள்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்துத் தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தில்லியில் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 60 சதவீதம் வாக்குகள் பதிவாகும் என கணிக்கப்படுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 90 ஆயிரம் முதல் 2.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோற்றனர். ஆனால், தற்போதை அரசியல் தேர்தல் சூழல் மாறியுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 5 மக்களவைத் தொகுதிகளில் உள்ள பேரவைத் தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்துள்ளன. ஆம்ஆத்மி கட்சிக்கு இரண்டு மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சியிலிருந்து விலகியதால் ஆம்ஆத்மி மீது அக் கட்சியின் உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளனர். அக் கட்சி மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் இம் முறை நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

    தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

    பள்ளி வேன் ஓட்டுநர் சங்கம் ஆதரவு: இதனிடையே, தில்லியில் உள்ள தனியார் பள்ளிகளின் வேன் ஓட்டுநர் சங்க அமைப்புகள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    பள்ளி வேன் ஆப்ரேட்டர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷ் துவா, பாரதிய தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலைவர் ராஜேந்தர் சோனி, தில்லி ஆட்டோ ரிக்ஷா சங்கத் தலைவர் ரிஷிபால், அனைத்து தில்லி பள்ளி வேன் ஆப்ரேட்டர்கள் நல சங்கத் தலைவர் ரவீந்தர் சர்மா, தில்லி பிரதேச வாடகை கார் ஓட்டுநர் சங்கத் தலைவர் ராகேஷ் குமார் டிட்டு உள்ளிட்டோர் பாஜக தலைவர்கள் ஹர்ஷ் வர்தன், விஜய்குமார் மல்ஹோத்ரா ஆகியோரை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai