Enable Javscript for better performance
வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி பிடித்த பெண்- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி பிடித்த பெண்

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நால்வரில் இருவரைப் போராடிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார் இளம் பெண்.

    மேற்கு தில்லி திலக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏக்தா பத்ரா (29). கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டனர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை, ஏக்தா பத்ரா மடக்கிப் பிடிக்க முயன்றார். அதில் இருவர் மட்டுமே சிக்கினர். அவர்கள் இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து காவல் துணை ஆணையர் ரண்வீர் சிங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், "ஏக்தா பத்ராவின் துணிச்சலையும் சாதுர்யத்தையும் பாராட்டுகிறேன்.

    அவருக்கு துணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருது கிடைக்க பரிந்துரை செய்வோம். கொள்ளையர்கள் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளன. தேவேந்தர் சாஹு, சந்தோஷ் ஆகிய இருவரையும் ஏக்தா பத்ரா பிடித்துள்ளார். தப்பியோடிய முகேஷ், சிவம் ஆகியோரை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது' என்றார் ரண்வீர் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai