Enable Javscript for better performance
ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த நேபாள இளைஞர்கள் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்த நேபாள இளைஞர்கள் இருவர் சாவு

    By புது தில்லி  |   Published on : 06th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஹோட்டலின் மாடியிலிருந்து கீழே விழுந்த நேபாள இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் வேலை தேடி தில்லிக்கு வந்த சமயத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இது குறித்து போலீஸார் கூறியது: நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஜங்பகதூர் (22), பிரகாஷ் 35). வேலை தேடி அண்மையில் தில்லிக்கு வந்தனர். அவர்கள் மத்திய தில்லி, பாஹர்கஞ்ச் பகுதியில் ஹோட்டலில் அறை எடுத்து கடந்த மூன்று நாள்களாகத் தங்கியிருந்தனர்.

    இந் நிலையில் புதன்கிழமை இரவு ஹோட்டலின் மேற்கூரைப் பகுதியிலிருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் தங்களது உறவினர் ஒருவருடன் சேர்ந்து அன்று இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுடன் இருந்த உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai