Enable Javscript for better performance
ஆம்ஆத்மி தலைவருக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்ய தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி தலைவருக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்ய தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

    By புது தில்லி  |   Published on : 07th April 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி சட்டப் பேரவைத் தேர்தலின்போது வாக்குச் சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் தகராறில் ஈடுபட்டதாக போலீஸார் அளித்த புகார் விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இது குறித்த விவரம் வருமாறு: தில்லியை சேர்ந்தவர் ராஜன் பிரகாஷ். இவர் ஆம்ஆத்மியைச் சேர்ந்தவர். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

    டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற இதற்கான வாக்குப் பதிவின்போது வடமேற்கு தில்லி, கிராரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நவாப் அலியிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாக பிரகாஷ் மற்றும் அக் கட்சியின் தொண்டர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப்.ஐ.ஆர்.) செய்யப்பட்டது.

    "ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் போலீஸார் வேண்டுமென்ற என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்' என்று கூறி, அதை ரத்து செய்ய கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் ராஜன் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வீணா பீர்பல் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிமன்றத்தில், "சம்பவ இடத்தில் சிறிய அளவில் வாய்த் தகராறு நிகழ்ந்தாகக் கூறி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், பிறர் தந்த நெருக்குதல் காரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றியுள்ளனர்.

    ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அவர் முறையிட்டார்.

    இரு தரப்பு விசாரணைகளுக்குப் பிறகு நீதிபதி, "முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கான வரம்பிற்குள் இந்த வழக்கு வரவில்லை' எனக் கூறி எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai