Enable Javscript for better performance
\\\"காங்கிரஸ் நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா?\\\'- Dinamani

சுடச்சுட

    

     தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை கூறத் தயாரா என்று ராகுல் காந்திக்கு ஆம்ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து ஆம்ஆத்மி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மக்களிடம் ஆம்ஆத்மி குறித்து தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிவருகிறார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆம்ஆத்மி போராடியபோது, பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து அதை நிறைவேற்றவிடாமல் தடுத்தது எந்தக் கட்சி? உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் பேரவைக்கு மீண்டும் தேர்தலை நடத்தவிடாமல் காங்கிரஸ் தப்பியோட முயற்சிப்பது ஏன்? மத்திய அரசின் தவறான கொள்கை மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொடர் ஊழல்களால் மக்களின் கோபத்துக்கு காங்கிரஸ் ஆளாகி வருகிறது. அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக ஆம்ஆத்மி மீது தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் பரப்பி வருகிறது.

    ஜன் லோக்பாலை நிறைவேற்ற முடியாத காரணத்தால்தான் ஆம்ஆத்மி ஆட்சியிலிருந்து விலகியது என்பதை ராகுல் காந்தி சொல்ல மறுப்பது ஏன்? நிலையான ஆட்சியை காங்கிரஸ் அளித்து வருவதாகக் கூறும் காங்கிரஸ், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை வைக்காமல் மறைமுகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது ஏன்? தில்லி பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸின் இப்போதைய நிலைப்பாடு என்ன என்பதை ராகுல் காந்தி கூறத் தயாரா? என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai