Enable Javscript for better performance
கிர்க்கி ரெய்டு விவகாரம் ஆவணப் படமானது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி கிர்க்கி பகுதியில் ஆப்பிரிக்கர்களிடம் சோதனை நடத்தி சர்ச்சைக்குள்ளான விவகாரம் ஆவணப் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட கோஜ் சர்வதேச கலைஞர்கள் சங்கம் சார்பில் "க்ரை அவுட் லவுடு' என்ற பெயரில் 75 நிமிட ஆவணப் படமாக அந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தில்லி கிர்க்கி பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் விபசாரம் நடைபெறுவதாகவும் வெளியான தகவலையடுத்து, ஆம்ஆத்மி ஆட்சியில் சட்டத் துறை அமைச்சராக இருந்த சோம்நாத் பார்தி அங்கு அதிரடி சோதனை நடத்தினார். ஆப்பிரிக்க பெண்கள் தங்கியிருந்த அறைகளில் அத்து மீறி அந்தரங்க சோதனை நடத்தியதாகப் புகார் எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் இந்தியாவில் கலாசார வேறுபாடுகளால் ஆப்பிரிக்கர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக ஆவணப்படத்தை வெளியிட்ட அமைப்பினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai