Enable Javscript for better performance
தில்லியில் பெண்கள் பாதுகாப்பு:காங்கிரஸ் மீது பாஜக சாடல்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பெண்கள் பாதுகாப்பு:காங்கிரஸ் மீது பாஜக சாடல்

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் ஆட்சியில் தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக தில்லி பிரதேச பாஜக தலைவர்கள் பிரபாத் ஜா, முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை செய்தியளார்களிடம் கூறியது:

    தில்லியில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. துணை மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தில்லிக்கு அவப்பெயரை பெற்றுத் தந்தது. பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் 412 மடங்கு அதிகரித்துள்ளன.

    "நிர்பயா' நிதித் திட்டத்துக்குகாக அறிவிக்கப்பட்ட ரூ. 1,000 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது. பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் "ஜிபிஎஸ்' கருவி, "ஹெல்ப்லைன்' வசதி, பள்ளிகளில் தற்காப்புக் கலை பாடத் திட்டம் ஆகியன கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    49 நாள்கள் நடைபெற்ற ஆம்ஆத்மி ஆட்சியிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட "மகளிர் பாதுகாப்புப் படை' உருவாக்கப்படவில்லை. ஆம்ஆத்மி ஆட்சியில் 388 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai