துவாரகா கோயிலில் ஸ்ரீ ராமநவமி விழா நாளை தொடக்கம்
By புது தில்லி, | Published on : 07th April 2014 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புது தில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் ஸ்ரீ ராமநவமி
விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், சீதா கல்யாணம் வைபவம் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை மஹா கணபதி ஹோமம், புருஷ ஸþக்த ஹோமம், ஸம்úக்ஷப ராமயாண ஹோமம், ராம நாம ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமருக்கு ஏகாதச புருஷ ஸþக்த அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 5 மணி முதல் நடைபெறும். மேலும், ராம நவமி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கோயிலில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கும்பகோணம் அனந்தநாராயண பாகவதரின் நாம சங்கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு சீதா கல்யாணம் வைபவம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.