Enable Javscript for better performance
தேர்தலில் போட்டியிடாத பிரதமர்:மன்மோகன் பற்றி பாஜக விமர்சனம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலில் போட்டியிடாத பிரதமர்:மன்மோகன் பற்றி பாஜக விமர்சனம்

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "உலக நாடுகளில் பொதுத் தேர்தலில் போட்டியிடாத பிரதமர் நம் நாட்டில்தான் உள்ளார்' என்று காங்கிரûஸ பாஜக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரும் அக் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தில்லி பிரசார குழுத் தலைவருமான விஜய்குமார் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

    கடந்த 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக உள்ளார். இவரது தலைமையில் கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால், உடல் ஆரோக்கியத்துடன் உள்ள பிரதமர், அவர் வசிக்கும் தில்லியிலேயே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    காங்கிரஸ் அரசின் சாதனைகளை விளக்கி அளிக்கப்படும் தேர்தல் விளம்பரங்களில் பிரதமரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந் நிலையில், தேர்தலுக்குப் பிறகு வசிப்பதற்கான குடியிருப்பைத் தேடி முடித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைத் தவிர முக்கியத் தலைவர்கள் யாரும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    ஆனால், பாஜக சார்பில் அதன் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, சத்ருகன் சின்ஹா, ஹோஷியாரி, பி.சி.கந்தூரி, முக்தார் அப்பாஸ் நக்வி, ராம்லால், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபாத் ஜா, சத்பால் மகாராஜ், வாணி திரிபாதி, ஆர்த்தி மெஹரா, விஜய் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அக் கட்சியை வலுவிழக்கச் செய்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அக் கட்சி ஏமாற்றத்தைக் கண்டுவருகிறது. இதேபோன்று உள்கட்சிப் பூசல், ஸ்தாபக உறுப்பினர்களின் ஊழல் ஆகியனவற்றால் ஆம்ஆத்மி கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

    இத்தகைய சூழலில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கு பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதையடுத்து, தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார் விஜய்குமார் மல்ஹோத்ரா.

    1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெற்கு தில்லியில் போட்டியிட்ட மன்மோகன் சிங், பாஜக வேட்பாளர் விஜய்குமார் மல்ஹோத்ராவிடம் 29,999 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அப்போது விஜய்குமார் மல்ஹோத்ராவுக்கு 2,61,230 (52.25%) வாக்குகளும், மன்மோகன் சிங்கிற்கு 2,31,231 (46.25%) வாக்குகளும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நரேந்தர் நாத் சுக்லா உள்பட அனைவரும் 3,000 வாக்குகளுக்கும் குறைவாகவே பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai