Enable Javscript for better performance
பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவிக்கரம்- Dinamani

சுடச்சுட

    

    பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவிக்கரம்

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி, வசந்த் குஞ்ஜ் பகுதியில் இருந்த முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவ ஏராளமானோர் முன்வந்தனர்.

    இக் காப்பகத்தை "எர்த் சேவியர்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம் நடத்திவந்தது. அங்கு தாற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 150 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

    இந் நிலையில், காப்பகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 10 தாற்காலிக முகாம்களில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் காயமின்றி தப்பினர். ஆனால், நடக்க இயலாமல் இருந்த 30 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, தீக்காயங்கள் ஏற்பட்டு ரமேஷ் சந்த் (60), காது கேளாதவரான பூனம் (27) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக இத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, அதில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. தீ விபத்தைத் தொடர்ந்து பலர் அவ்விடத்திலிருந்து ஓடி வெளியேறிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    தீ விபத்து நிகழ்ந்த முதியோர் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடம் சுக்பீர் சிங் என்பவருக்கு சொந்தமானது. அந்த இடத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். குத்தகைக் காலம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. முகாமை காலி செய்யுமாறு கூறப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி வணிக வளாகம் அமைந்துள்ள நடைபாதையில் முதியோர்கள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மீண்டும் குத்தகைக்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதும் இங்கு தங்க வைக்கப்பட்டனர்.

    உதவிக்கரம்: இதற்கிடையே காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த பலர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு உதவுவதற்காக பணம், உணவு, துணி, போர்வைகள், மருந்துகள் குவிந்தன. கல்லூரி மாணவர்கள் பலர் வந்து பல்வேறு உதவிகளைச் செய்ததாக காப்பகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

    ஆனால், தங்களது உறவினர்களை எதிர்பார்த்து வயது முதிர்ந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்ததைக் காண முடிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, தீவிபத்தில் எரிந்து நாசமான காப்பகத்துக்கு அருகில் உள்ள இடத்தின் உரிமையாளர் ஒருவர், முதியோர் காப்பகம் அமைப்பதற்கு வாடகை அடிப்படையில் இடம் அளிக்க முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai