Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்:வாக்குப்பதிவு நேரம் காலை 7-மாலை 6 மணி- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்:வாக்குப்பதிவு நேரம் காலை 7-மாலை 6 மணி

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    16-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (ஏப்ரல் 7) தொடங்குகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மட்டும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். இருப்பினும், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இருக்கும்.

    அதேபோன்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜ்மஹல், தும்கா, கோட்டா, தன்பாத் உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதியில் இருந்து மே 12-ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai