Enable Javscript for better performance
மயூர்விஹார் ஃபேஸ்-3 விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர விழா- Dinamani

சுடச்சுட

    

    மயூர்விஹார் ஃபேஸ்-3 விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர விழா

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர விழா ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு ஸ்ரீ ஐயப்ப, முருகன் பஜனை, மாலை 5 மணிக்கு திருப்புகழ் பஜனை, மாலை 6.30 மணிக்கு ராமாயணம் நாடகம், இரவு 8 மணிக்கு ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெறும்.

    முன்னதாக, ஏப்ரல் 8-ஆம் தேதி ராமநவமி மஹோத்ஸவம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு பஜனை நடைபெறுகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ வி. தட்சிணாமூர்த்தி பாகவதர் குழுவினரின் திவ்யநாம பஜனை இடம்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆதிசங்கர சேவா சமாஜத்தினர் செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai