Enable Javscript for better performance
வாக்குப்பதிவு நாளில் சிறப்பு பஸ் வசதி \\\"டிடிசி\\\' ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு நாளில் சிறப்பு பஸ் வசதி "டிடிசி' ஏற்பாடு

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 10-ஆம் தேதி தேர்தல் பணியாளர்களுக்காகச் சிறப்பு பஸ்களை இயக்க தில்லி அரசு போக்குவரத்து கழகம் (டிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.

    இது தொடர்பாக டிடிசி உயர் அதிகாரி கூறுகையில், "தேர்தல் பணிக்காக செல்லும் அலுவலர்களுக்கு உதவியாக வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 3 மணி முதல் டிடிசி பஸ்கள் இயக்கப்படும்.

    தில்லியின் அனைத்துப் பகுதிகளிளுக்கும் செல்லும் வகையில் 35 தடங்களில் இச் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் இப் பஸ்கள் இயக்கப்படும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai