Enable Javscript for better performance
வியாபாரி கொலை வழக்கில் ஒருவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    : தில்லி நஜஃப்கர் அருகே வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

    தில்லி நஜஃப்கர் கோய்லா டெய்ரி சாலை அருகே மளிகைக் கடை வைத்திருப்பவர் பிரவீண் சிங்லா. இவர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை மூடும்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணத்தை பறித்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பிரவீண் சிங்லா உயிரிழந்தார்.

    இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அப் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த விகாஸ் (எ) கோலு என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந் நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி விகாûஸ போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai