Enable Javscript for better performance
வீட்டு வசதி திட்டத்தில் கோடிக் கணக்கில் மோசடி: தொழிலதிபர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வீட்டு வசதி திட்டத்தில் கோடிக் கணக்கில் மோசடி: தொழிலதிபர் கைது

    By புது தில்லி,  |   Published on : 07th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தருவதாக சுமார் 200 முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்து மோசடி செய்ததாக கட்டுமானத் தொழிலதிபர் அஜித் மித்தல் (46) பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வாக்குறுதி அளித்தபடி வீடுகளை குறித்த தேதியில் ஒதுக்கீடு செய்யவில்லை என்று முதலீட்டாளர்கள் தெரிவித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியது:

    அவர் அட்வான்டேஜ் என்ஜினீயர்ஸ் அண்ட் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

    அதில் "சிவ்கலா கிளாமர் சிட்டி' என்ற பெயரில் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. குடியிருப்புகளின் மாதிரி உள்ளிட்ட விவரங்கள் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

    முதலீடு செய்பவர்களுக்கு வீடுகள் 2010, டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, செக்டர்-49-இல் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட இத் திட்டத்தில் சுமார் 200 முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். ஆனால், குறித்த தேதிப்படி வீடுகள் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    இதையடுத்து, முதலீட்டாளர்கள் தொடர்பு கொண்டபோது பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக அஜித் மித்தலும் அவரது சகோதரர் மஹிம் மித்தல் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். புகாரின் பேரில் அஜித் மித்தல் மற்றும் பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந் நிலையில், அஜித் மித்தல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai