Enable Javscript for better performance
ஆம்ஆத்மி அதிருப்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி அதிருப்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

    By புது தில்லி,  |   Published on : 08th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அக் கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் தில்லியில் திங்கள்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தில்லி நிர்மாண் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான லலித் ராஸ்தான் தலைமை வகித்தார்.

    மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தில்லியில் நிலையான ஆட்சி நடத்தாமல் கேஜரிவால் தலைமையிலான அரசு வெளியேறியதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடைபெற்றது. இதில் அக் கட்சி உறுப்பினர்களான இந்தர் கோகியா, மோஹித் ஜேட்லி, சுனித், வினித் ராஜேஷ் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து லலித் ராஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆம்ஆத்மி இயக்கம்' என்ற பெயரில் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடுகளைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சியைவிட்டு வெளியேறிய கேஜரிவால், இப்போது பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தவறான செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கட்சியின் கொள்கைக்கு நேர்மாறாக நடந்து கொள்ளும் அவருடைய செயல்பாடு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரைவிட மோசமாக உள்ளது' என்றார்.

    இதே போல கேஜரிவாலின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக் கட்சியின் அதிருப்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai