Enable Javscript for better performance
காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடி பறிமுதல்

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தர பிரதேச மாநில எல்லைப் பகுதியான மொராத் நகரில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.99 கோடியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

    மொராத் நகரில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த ஹரியாணா மாநில பதிவு எண் கொண்ட மாருதி காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில், ரொக்கம் ரூ. 3.99 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அப் பணம் தில்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. பணத்திற்குரிய உரிய ஆவணங்களை காரின் ஓட்டுநர் அளிக்கவில்லை. அதற்கான விளக்கமும் தரவில்லை.

    இதையடுத்து, தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுவினர் சம்பந்தப்பட்ட காரையும் ரொக்கம் ரூ. 3.99 கோடியையும் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai