Enable Javscript for better performance
தலைநகரில் தேடப்பட்ட 7 கொள்ளையர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த கொள்ளையர்களில் 7 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: இக் கும்பல் தலைநகரில் பல்வேறு இடங்களில் கடந்த 9-10 மாதங்களாக கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது.

    இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தில்லியைச் சேர்ந்த அவர்களிடம் இருந்து தானியங்கி கைத்துப்பாக்கி, 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

    அவர்கள், தலைநகரில் பல்வேறு இடங்களில் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டதை விசாரணையின்போது ஒப்புக் கொண்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai