Enable Javscript for better performance
\\\"பிஎஸ்எஃப்\\\' தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    "பிஎஸ்எஃப்' தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் பொறுப்பேற்பு

    By புது தில்லி,  |   Published on : 08th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 23-வது தலைமை இயக்குநராக தேவேந்திர குமார் பாடக் (ஐபிஎஸ்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை அடுத்த நேதார்ஹட்டில் 1956-ஆம் ஆண்டு பிறந்த இவர், தில்லி பல்கலைக்கழகம் கிரோரி மால் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் 1978-ஆம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார்.

    1979-இல் ஐபிஎஸ் அதிகாரியானவர், அசாம் - மேகாலயம் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மூத்த கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினார்.

    அசாம் மாநிலத்தில் ஐ.ஜி. (சட்டம் - ஒழங்கு) ஆக இருந்தார். 2008-ஆம் ஆண்டு மத்திய பிரிவுக்கு மாற்றப்பட்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நக்ஸலைட்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட "கோப்ரா' படை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

    போலீஸ் சிறப்பு பணிக்கான பதக்கம், போலீஸ் ஆந்த்ரிக் சுரக்ஷா பதக்கம், குடியரசுத் தலைவர் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai