Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தலில்ஆம்ஆத்மி தோல்வியடையும்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில்ஆம்ஆத்மி தோல்வியடையும்

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக் கட்சியின் தில்லி பிரதேச மூத்த தலைவர் ஹாரூண் யூசுஃப் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், "தில்லியிலுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு பெருகிவருகிறது.

    பாஜகவுடன்தான் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தெற்கு தில்லி தட்சிணபுரியில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற தேர்தல் கூட்டத்தில் ஏராளமனோர் பங்கேற்றனர். ஆம்ஆத்மிக்கு ஆதரவு குறைந்துள்ளது.

    தேர்தலில் அக் கட்சி படுதோல்வியடைவதுடன், டெபாசிட் தொகையையும் இழக்கும்" என்றார்.

    தில்லி பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், "மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்ற அச்சம் காரணமாகவே தில்லி ராம்லீலா மைதானத்தில் திட்டமிடப்பட்ட மோடி பிரசார பொதுக்கூட்டத்தை பாஜக ரத்து செய்தது.

    இதையடுத்து, ரூ.15 லட்சம் மதிப்புள்ள பிரமாண்டமான முப்பரிமாண (3டி) திரைகளை 15 பகுதிகளில் அமைத்து மோடியின் பிரசாரம் ஒளிபரப்பப்படுகிறது. இதற்காக கருப்புப் பணம் செலவிடப்படுகிறது. "ஏக் நோட், ஏக் வோட்' என்ற பாஜகவின் தேர்தல் பிரசாரம் தோல்வியடைந்துவிட்டது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai