Enable Javscript for better performance
4 மாநில பேரவைத் தேர்தல்களில் போட்டியிடாத ஆம்ஆத்மி கட்சி- Dinamani

சுடச்சுட

    

    4 மாநில பேரவைத் தேர்தல்களில் போட்டியிடாத ஆம்ஆத்மி கட்சி

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்துவதால் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெறுகின்றன. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு முழுவதும் 431 வேட்பாளர்களை ஆம்ஆத்மி நிறுத்தியுள்ளது. ஆனால், 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அக் கட்சி அறிவிக்கவில்லை.

    இது குறித்து அக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் நாங்கள் இப்போது ஈடுபட்டு வருகிறோம்.

    நாங்கள் இப்போது மக்களவைத் தேர்தல்களில் கவனம் செலுத்த உள்ளோம். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை.

    எனினும், மக்களவைத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. அங்கு எங்கள் கட்சி நிச்சயம் போட்டியிடும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai