Enable Javscript for better performance
ஆம்ஆத்மி வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரிக்கு எதிராக அவதூறு பிரசுரம் விநியோகம் செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் தேவேந்தர் ஷெராவத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து தில்லி பிரதேச பாஜக துணைத் தலைவர் ஆசிஷ் சூட் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "ஆம்ஆத்மி வேட்பாளர் தேவேந்தர் ஷெராவத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி மீது 10 குற்ற வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவதூறான செய்தியாகும். பிதூரி தாக்கல் செய்த வேட்புமனுவில் அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், அதற்கு அடுத்த மூன்று நாள்களில் இதே குற்றச்சாட்டை முன்வைத்து துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து தொகுதி முழுவதும் ஆம்ஆத்மி கட்சியினர் விநியோகித்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த 3-ஆம் தேதி புகார் அளித்தோம். அதன் மீது தற்போது ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai