Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட்: மேலும் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட்: மேலும் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்காக மேலும் 6 வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது: ஆந்திரப்பிரதேச மாநிலம் கம்மம் தொகுதியில் கே.நாராயணா போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் லால்கஞ்ச் தொகுதியில் ஹரி பிரசாத் சோலங்கர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நிர்மல் சிங் தாலிவால், குருதாஸ்பூரில் வரீந்தர் சிங், சங்கரூர் தொகுதியில் சுகதேவ் சர்மா, அமிருதரஸ் தொகுதியில் அமர்ஜித் சிங் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று சுதாகர் ரெட்டி கூறினார். இவர்களுடன் சேர்த்து இதுவரை 69 வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai