Enable Javscript for better performance
சிறுகடைகளை நள்ளிரவு வரை திறந்துவைக்க பரிசீலனை: என்டிஎம்சி தலைவர் தகவல் - Dinamani

சுடச்சுட

    

    சிறுகடைகளை நள்ளிரவு வரை திறந்துவைக்க பரிசீலனை: என்டிஎம்சி தலைவர் தகவல்

    By புது தில்லி  |   Published on : 09th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லியில் சிறு கடைகளை நள்ளிரவு 1 மணி வரை திறந்துவைக்க அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக என்டிஎம்சி (புது தில்லி முனிசிபல் கவுன்சில்) தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கான் மார்க்கெட், கனாட் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுகடைகளை இரவு 9 மணிக்குள் மூடுமாறு தில்லி அரசும் காவல் துறையும் உத்தரவிட்டுள்ளது. இக் கட்டுப்பாடு நீண்ட நாள்களாக அமலில் இருப்பதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துவந்தனர்.

    இது குறித்து என்டிஎம்சி தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "வியாபாரிகளின் கோரிக்கையை நாங்கள் பரிசீலித்துவருகிறோம். வியாபாரிகளின் நலனைக் கவனத்தில் கொள்ளும்படி வலியுறுத்தும் தீர்மானத்தை கவுன்சில் நிறைவேற்றவுள்ளது. அதன் நகல் மற்ற துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனினும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தில்லி அரசும் போலீஸýம்தான். நாங்கள் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்போம்' என்றார்.

    அண்மையில் கனாட் பிளேஸ் சுரங்கப் பாதையில் இரவு நேரங்களில் உணவருந்தும் வகையில் கடைகளைத் திறக்க மாநகராட்சி அனுமதியளித்திருந்தது. அதற்கு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai