Enable Javscript for better performance
சோனியாவுக்கு எதிரான ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்- Dinamani

சுடச்சுட

    

    சோனியாவுக்கு எதிரான ஆம் ஆத்மி வேட்பாளர் திடீர் விலகல்

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான பக்ருதீன் செவ்வாய்க்கிழமை திடீரென போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

    "தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பக்ருதீன் விலகியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை' என்று ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    அண்மையில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட 14ஆவது வேட்பாளர் பட்டியலில் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு பக்ருதீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவர் மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவராவார்.

    தற்போது பக்ருதீன் விலகியுள்ள நிலையில், இந்த தொகுதிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக சமூக சேவகர் அர்ச்சனா ஸ்ரீவத்சவா நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai