Enable Javscript for better performance
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயார்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், சட்டப்பேரவைத் தேர்தலை எந்த நேரத்தில் நடத்தினாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    தில்லி தட்சிணபுரியில் அக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ராகுல் காந்தி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    சட்டப்பேரவை முடக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே மார்ச் 31-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தங்களது நிலையைத் தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில், ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்காது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் எந்த நேரத்திலும் தயாராகவே உள்ளது. தெற்கு தில்லி, தட்சிணபுரியில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டியுள்ளதை காட்டுகிறது.

    இந் நிலையில், தில்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பமாகும். 49 நாள்களே ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி கட்சி மக்களை திசைதிருப்பிவிட்டது.

    இதை தில்லிவாசிகள் இப்போது உணர்கிறார்கள். எனவே எப்போது பேரவைத் தேர்தல் நடத்தினாலும் அதை காங்கிரஸ் எதிர்கொள்ளும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தில்லியில் மேற்கொண்ட மேம்பாட்டுத் திட்டங்களை கூறி மீண்டும் களம் காண்போம்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai