Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: இன்று 2ஆவது கட்ட வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: இன்று 2ஆவது கட்ட வாக்குப்பதிவு

    By புது தில்லி  |   Published on : 09th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    பதினாறாவது மக்களவைக்கான தேர்தல், கடந்த திங்கள்கிழமை தொடங்கி (ஏப்ரல் 7) 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அருணாசலப்பிரதேசம் (2), மேகாலயம் (2), நாகாலாந்து (1), மணிப்பூர் (1) ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது.

    அருணாசலப்பிரதேசம்: அருணாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுடன் (மேற்கு, கிழக்கு தொகுதிகள்) சேர்த்து அந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 49 இடங்களுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. ( 11 தொகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது)

    மேற்கு மக்களவைத் தொகுதியில் 8 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் தகாம் சஞ்சோய் (காங்கிரஸ் எம்.பி.), முன்னாள் எம்.பி. கிரண் ரிஜுஜு (பாஜக) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மத்திய அமைச்சர் நினோங் எரிங் (காங்கிரஸ்), தபிர் கவோ (பாஜக), வாங்மேன் லோவாங்ஷா (அருணாசல மக்கள் கட்சி) ஆகியோர் முக்கியமானவர்கள்.

    அருணாசலப்பிரதேசத்தின் 49 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில், 155 பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    மேகாலயம்: மேகாலய மாநிலத்தில் உள்ள ஷில்லாங், துரா ஆகிய 2 தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. துரா தொகுதியில் தேசிய மக்கள் கட்சித் தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான பி.ஏ. சங்மா மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கதேசத்தை ஒட்டிய 443 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லைப்பகுதி மூடப்பட்டுள்ளது.

    நாகாலாந்து: நாகாலாந்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்வருமான நேபியு ரியோ, காங்கிரஸ் வேட்பாளர் கே.வி. புஸா, சோஷலிஸ்ட் கட்சி (இந்தியா) வேட்பாளர் அக்கியு அசுமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

    மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில் வெளி மணிப்பூர் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் 10 பேர் போட்டியிடுகின்றனர். அதேசமயம் உள் மணிப்பூர் தொகுதிக்கு 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மிúஸாரம் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியுடன் சேர்த்து, ராங்டுர்ஜோ சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த இடைத் தேர்தல் 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai