Enable Javscript for better performance
மோடியின் \\\"வாட்ஸ் ஆப்\\\' பிரசாரத்துக்கு எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மோடியின் "வாட்ஸ் ஆப்' பிரசாரத்துக்கு எதிர்ப்பு

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செல்போன்களில் இணையதள வசதியுடன் அனுப்பப்படும் தகவல்கள் (வாட்ஸ் ஆப்), அழைப்புகள் மூலம் செய்து வரும் பிரசாரத்துக்கு உடனடியாக தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை புகார் கூறியுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித் கெüர் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ""நரேந்திர மோடி "வாட்ஸ் ஆப்' வசதி மூலம் மதவாத தகவல்களை அனுப்பி பாஜகவுக்கு வாக்கு கேட்டு வருகிறார்.

    ஆகவே தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால், மோடியின் பெயரில் செல்போன்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் (வாட்ஸ் ஆப்), அழைப்புகள் மூலம் செய்து வரும் மதவாதத்துடன் கூடிய பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai