Enable Javscript for better performance
மோடியுடன் ஏப்.11-ல் \\\"3டி\\\' கலந்துரையாடல்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியுடன் முப்பரிமாண ("3டி') முறையில் வாக்காளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏப்ரல் 11-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் நவீன தொழில்நுட்பமான 3-டி மூலம் வாக்காளர்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடல் நடத்தும் நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந் நிகழ்ச்சியை சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடத்த முடியாமல் போனது. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந் நிலையில், தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுதினம் (ஏப்ரல் 11) மோடி பங்கேற்கும் "3டி' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    இக் கலந்துரையாடல் நிகழ்வு வியாழக்கிழமை மாலை 6 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அதே சமயம், இந்த நிகழ்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 10 இடங்களில் அல்லாது இம் முறை நான்கு இடங்களில் மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    இது தொடர்பாக தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், "மோடியின் 3டி கலந்துரையாடல் நிகழ்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதில் எந்த பின்னணியும் கிடையாது' என்றார்.

    முன்னதாக, தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு தீவிர பிரசாரத்தில் நரேந்திர மோடி ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக 3டி கலந்துரையாடல் நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி, நரேந்திர மோடியே நேரில் தோன்றிப் பேசுவது போன்ற முப்பரிமாண காட்சிகளுடன் கூடிய தொழில்நுட்ப வசதியை தில்லிவாசிகள் காணும் வாய்ப்பு இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai