Enable Javscript for better performance
ஆர்எஸ்எஸ், மதத் தலைவர்களின் செயலைக் கண்காணிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஆர்எஸ்எஸ், மதத் தலைவர்களின் செயலைக் கண்காணிக்க வேண்டும்

    By dn  |   Published on : 10th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இது தொடர்பாக அக் கட்சியின் சட்டப் பிரிவுச் செயலர் கே.சி. மித்தல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

    தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை யோகா குரு பாபா ராம்தேவ் பயிற்சி முகாம் நடத்தினார். அப்போது யோகா பயிற்சி என்ற போர்வையில் அவர் பாஜகவுக்கு சாதகமாக வாக்காளர்களைக் கவரும் வகையில் பேசினார். இது தொடர்பான புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் ராம்தேவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ராம்தேவ் மட்டுமின்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் தனது ஆன்மிக நிகழ்ச்சிகளில் அரசியல் பேசி வருகிறார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக பொது நிகழ்வில் பிரசாரம் போல உரையாற்றுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். அவ்வாறு செயல்பட விரும்பும் அமைப்புகள் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொண்டு கருத்துகளை வெளியிடட்டும்.

    இது போன்ற அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய அறிவுரையை வழங்க வேண்டும். பொது இடத்தில் எது செய்யலாம், எதை செய்யக் கூடாது போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும். மத நிகழ்ச்சிகளில் அரசியல் பேசும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. ஆகவே, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு மத அமைப்புகளின் நிகழ்வுகளை விடியோ பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை வேண்டும். அதன் தலைவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.

    இது போன்ற அமைப்புகளின் நிகழ்ச்சிக்கும், அவற்றின் தலைவர்களுக்கும் செய்யப்படும் செலவினத்துக்கு யார் நிதி தருவது? அவற்றின் பின்னணியில் இருந்து செயல்படுவது யார்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்' என்று மித்தல் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai