Enable Javscript for better performance
கேஜரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ராஜ்காட் பகுதியில் அனுமதியின்றி திடீரென ஆதரவாளர்களுடன் தர்னா நடத்தியது தொடர்பாக 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் சார்பில் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து மேற்கண்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னதாக, வடமேற்கு தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராக்கி பிர்லாவை ஆதரித்து அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்தார்.

    அப்போது, அவருக்கு மாலை அணிவிக்க வந்த ஆட்டோ ஓட்டுநர் லாலி திடீரென கேஜரிவால் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, அத் தொகுதியில் பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு வந்தார்.

    அவருடன் ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிúஸாடியா, கட்சி வேட்பாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் வந்தனர்.

    அங்கு சுமார் ஒரு மணி நேரம் அமைதியாக அனைவரும் தர்னாவில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சிலர், கேஜரிவாலைக் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதலையும் காந்தி மீது கோட்சே நடத்திய தாக்குதலையும் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதைப் பரிசீலித்த ஆணையம், "இந்த விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்' என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai