Enable Javscript for better performance
சங்கடஹர கணபதி கோயிலில் வசந்த நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    கிழக்குத் தில்லி, வசுந்தரா என்கிளேவில் அமைந்துள்ள சங்கடஹர கணபதி கோயிலில் மார்ச் 31-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 9 நாள்களுக்கு வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.

    இதையொட்டி, ஸ்ரீ துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வசுந்தரா என்கிளேவ் பகுதியைச் சேர்ந்த மகளிர் பங்கேற்ற ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. மாலையில் சந்தன அலங்காரத்தில் துர்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ராம நவமி விழா விமர்சியாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பக்தர்கள் ஸ்ரீ ஹனுமன் சாலிசா பாராயணம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து, "சுந்தர காண்டம்' எனும் தலைப்பில் சந்திரசேகர் சொற்பொழிவாற்றினார். இந் நிகழ்ச்சியில் தில்லி, தேசியத் தலைநகர் வலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கலந்து கொண்டனர்.

    ஏப்.13-இல் சீதா கல்யாணம்:கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) சீதா கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பாகவதர் தலைமையிலான குழுவினர் நடத்த உள்ளனர். இத் தகவலை கோயில் துணைத் தலைவர் எஸ். வெங்கடேஷ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai