Enable Javscript for better performance
சுப்ரதா ராயை வீட்டுக் காவலில் வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    சுப்ரதா ராயை வீட்டுக் காவலில் வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

    By dn  |   Published on : 10th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதற்கான நிதியை திரட்டுவதற்காக, சிறையிலிருந்து தன்னை வீட்டுக்காவலுக்கு மாற்றம் செய்யக் கோரி சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜே.எஸ். கெஹர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி, "நீதிமன்ற உத்தரவின் படி, பணத்தை திரும்ப வழங்குவதற்காக நிதி திரட்ட வேண்டியுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள எனது கட்சிக்காரரை தொழிலதிபர்கள் சந்திப்பது சாத்தியமற்றது. ஆகையால், அவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "உங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்று கொண்டால் இந்த விவகாரம் இத்துடன் முற்று பெற்றதாகிவிடக் கூடும். சுப்ரதா ராய்க்கு நாங்கள் தண்டனை வழங்கவில்லை. அவர் நீதிமன்றக் காவலில்தான் உள்ளார்' என்று கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai