சுடச்சுட

  

  "மக்களவைத் தேர்தலில் தில்லி பிரதேசத்தின் 7 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்' என ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், வேட்பாளர் தேர்வுக் குழுவின் செயலாளருமான திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

  கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மார்ச் 31-ஆம் தேதி தில்லியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அன்று முதல், மக்களுடைய ஆதரவும், கவனமும் எங்கள் கட்சிப் பக்கம் திரும்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், கருத்துகள் ஆகியனவே கட்சிக்கு பெருகிவரும் ஆதரவுக்கு சாட்சியாக உள்ளன. இந் நிலையில், கேஜரிவாலுக்கு எதிரான அலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

  பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் போல பகட்டான தேர்தல் பிரசார கூட்டங்களை ஆம் ஆத்மி நடத்தவில்லை. மாறாக சாலையோர பிரசாரம், ஜன சபாக்கள் ஆகியவற்றின் வாயிலாகத்தான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டோம். மக்களவைத் தேர்தல் களத்தில் பாஜக அதன் செல்வாக்கை இழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி போட்டியில் இல்லை என்றார் திலீப் பாண்டே.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai