Enable Javscript for better performance
தில்லியில் 25,000 லிட்டர் மதுபானம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி இதுவரை சுமார் ரூ. 38 லட்சம் மதிப்புள்ள 25,000 லிட்டர் மதுபான பாட்டில்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

    இது தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு மதுபானங்கள் 80,980 பாட்டில்களும், வெளிநாட்டு மதுபானங்கள் 42,390 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கருப்புப் பணம், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தைக் காணிக்கும் தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதுவரை ரொக்கம் ரூ. 43,38,800-ஐ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவற்றை தில்லி போலீஸ், கலால், வருமான வரித் துறையினர் அடங்கிய சிறப்புத் தேர்தல் மேற்பார்வைக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    தேர்தலில் அதிகம் பணம் புழக்கம் உள்ள பகுதிகளாக 179 இடங்களைத் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் சாந்தினி செளக் தொகுதியில் காலனிகள், குடிசைவாசிகள் உள்ள 19 இடங்கள், மேற்கு தில்லியில் 17, தெற்கு தில்லியில் 26 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் கூறினார்.

    மேலும், வாக்குப்பதிவின்போது இப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், தேர்தல் சிறப்பு அதிரடிப்படையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொது, தனியார் சொத்துகளை சேதப்படுத்தியதாக அரசியல் கட்சியினர் மீது 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பாஜக மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி மீது 18 வழக்குகளும், காங்கிரஸ் கட்சி மீது 17 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

    கடந்த மார்ச் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததது முதல், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை சுமார் 600 நுண் பார்வையாளர்களும், 150 அதிரடிப் படைகளின் வீரர்களும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai