Enable Javscript for better performance
தில்லி மெட்ரோ ரயில் திட்டம்: குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மெட்ரோ ரயில் திட்டம்: குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கோரி வழக்கு

    By dn  |   Published on : 10th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதிர்வுகளிலிருந்து குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெற்கு தில்லி சாகேத் பகுதியைச் சேர்ந்த டி-பிளாக் குடியிருப்புவாசிகள் உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த மனு விவரம்:

    தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ஜஹாங்கீர்பூர் முதல் ஹூடா சிட்டி வரையிலான மஞ்சள் வழித் தடத்தில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில்கள் இயங்கும்போது சாகேத் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அண்மைக் காலமாக ஏற்படும் ஒலி,அதிர்வுகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே, குடியிருப்புகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. அதனால், சாகேத், டி- பிளாக் பகுதியில் உள்ள குடியிருப்புகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் ஷரீன், வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதில் அளிக்கும்படி தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    இப்புகார் தொடர்பான ஆவணங்களை அளிக்க அனந்தமாலா போத்தார் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஜூலை 7-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். ஆவணங்களை பதிவாளர் பரசீலித்த பிறகே வழக்கு குறித்த விசாரணை தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai