Enable Javscript for better performance
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை- Dinamani

சுடச்சுட

    

    புகார்கள் மீது எச்சரிக்கை மட்டுமே செய்துவிட்டு நடவடிக்கை ஏதும் எடுக்காத ஓர் அதிகாரம் இல்லாத அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் விமர்சித்துள்ளார்.

    தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித். இவர் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர். தற்போது இதே தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

    இத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, யோகா குரு பாபா ராம்தேவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் ஆகியோர் அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்வதாகவும், இதனால், இந்த அமைப்புகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்திருந்தது.

    இதுதொடர்பாக சந்தீப் தீட்சித் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், "வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், பொது மக்களுக்கு அனுப்பியுள்ள சில குறுந்தகவல்களை பார்த்தேன்.

    அதில், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை இரவு நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந் நிகழ்ச்சியின்போது இத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மகேஷ் கிரிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கப்பட உள்ளது.

    மகேஷ் கிரி இந் நிகழ்ச்சியைத் தனது பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புகாரின்பேரில், ஒரு சில எச்சரிக்கைகளை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேறு ஒன்றும் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் வேண்டுகோள் மட்டுமே விடுக்கிறது. அது அதிகாரம் இல்லாத (பற்கள் இல்லாத) அமைப்பாக உள்ளது என்றார் சந்தீப்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai