Enable Javscript for better performance
தோனி விவகாரம்: பிசிசிஐ மனு - Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் தோனியிடம் முகுல் முத்கல் விசாரணைக்குழு பதிவு செய்த வாக்குமூல விவரங்களை வழங்கக்கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு முன்னிலையில் பிசிசிஐ வழக்குரைஞர் சி.எஸ். சுந்தரம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

    அதில் ஐபிஎல் சூதாட்டப் புகார் குறித்து விசாரித்த முகுல் முத்கல் குழு கிரிக்கெட் வாரியக்குழு தலைவர் ஸ்ரீனிவாசன், இந்தியஅணி கேப்டன் தோனி உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெற்றது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசன்,தோனி, ஐபிஎல் செயலாக்க அலுவலர் சுந்தர் ராமன் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூல விவரங்களை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விவரங்கள் சூதாட்டப் புகார் வழக்கில், வாதிடுவதற்கு தேவைப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.எஸ்.சுந்தரம் விளக்கினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai