Enable Javscript for better performance
பாஜகவுக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    ""மக்களவைத் தேர்தலில் பண்டிட் சமுதாயத்தினர் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று பண்டிட்களின் அமைப்புகள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளன.

    இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் விசார் மஞ்ச் அமைப்பு கூறியிருப்பதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1989ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைத் தொடர்ந்து 5 லட்சம் பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பிரச்னை குறித்து எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை. இந்தப் பிரச்னைகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட்டு மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காஷ்மீர் பண்டிட் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூட வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளை நினைத்துப் பார்க்கவில்லை.

    எனவே பண்டிட்டுகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதேபோல், அனைத்திந்திய காஷ்மீரி சமாஜத்தின் பொதுச் செயலாளர் ரொமேஷ் ரெய்னா கூறுகையில், ""நாடு முழுவதும் மொத்தம் உள்ள 5 லட்சம் பண்டிட்டுகளில் 1.25 லட்சம் பேர் தலைநகர் தில்லியில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai