Enable Javscript for better performance
பொதுக்கூட்டத்தில் மோதல்: காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பொதுக்கூட்டத்தில் மோதல்: காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் மீது வழக்கு

    By dn  |   Published on : 10th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின்போது இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தொகுதியின் இப்போதைய எம்.பி. ரமேஷ் குமார் போட்டியிடுகிறார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கட்சி சார்பில் மெஹ்ரெளலியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பொதுக்கூட்டம் நடைபெற்றபோது முன்னாள் மேயர் சத்பீர்சிங் மற்றும் மகேந்தர்சிங் செளத்ரி ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சத்பீர் சிங்கின் ஆதரவாளர்களும், மகேந்தர் சிங்கின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர்.

    தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரண்டு தலைவர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இருவரும் பரஸ்பரம் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இச் சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

    காங்கிரஸில் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து பாஜகவுக்கு சென்ற சத்பீர் சிங் பின்னர் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸýக்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai