Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறவுள்ள தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இத் தகவலை தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் புதன்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

    மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதில் சிரமங்களைச் சந்தித்தாக புகார்கள் வந்தால் வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளே அதற்குப் பொறுபேற்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மாற்றுத் திறனாளிகளை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் முதல் முறையாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த வகையில் மாற்றுத் திறனாளிகள் விவகாரங்கள் துறையில் இருந்து சுமார் 2,527 சக்கர நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத் திறனாளிகள் சிரமமம் இல்லாமல் வாக்களிப்பதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், வாக்காளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளுக்கு போதிய பயற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார் விஜய் தேவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai