Enable Javscript for better performance
எஸ்எம்எஸ் வசதி: வாக்காளர்கள் ஆர்வம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வாக்களிக்கும் முன்பு எஸ்எம்எஸ் முலம் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கான "ஹெல்ப்லைன்' வசதியை 62,000-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாட்டின் தலைநகர் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, தில்லி தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்கள் தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா, எந்த வாக்குசாவடியில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை அறிய 9211728082 என்ற "ஹெல்ப்லைன்' எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தகவல்களைத் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "தேர்தல் ஆணையம் வழங்கிய உதவி எண் வாக்காளர்களுக்கு மிகவும் பயன் அளித்துள்ளது. அவர்களது பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறியவும், இல்லையெனில், பெயர்களைச் சேர்க்கவும் வாக்காளர்கள் பயன்படுத்தி கொண்டனர். இந்த உதவி எண்ணை, தில்லி வாக்காளர்களில் 62,000-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர்' என்று தெரிவித்தனர். இந்த ஹெல்ப்லைன் வசதி தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பணியின்போதே பயன்பாட்டில் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai