Enable Javscript for better performance
\\\"ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்' என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.

    தில்லி மக்களவைத் தேர்தலையொட்டி வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. தில்லி திலக் லேன் பகுதி குடியிருப்பில் வசித்துவரும் முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அப்பகுதி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இது ஊழலுக்கு எதிரான போராட்டமாகும். இப் போராட்டத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து உள்ளோம். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் தர்மயுத்தமாகும். உண்மைதான் வெற்றிபெறும். உண்மையும் சாமான்ய மனிதனும் வெற்றி பெறுவார்கள்.

    கடந்த முறை தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் தனது தோல்வியை அக் கட்சி ஏற்றுக் கொண்டது.

    அதேவேளையில், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, தான் பிரதமராகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். யார் அரசை அமைக்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' என்றார் கேஜரிவால். முன்னதாக, கேஜரிவாலுடன் அவரது தாய் கீதா தேவி, தந்தை கோவிந்த்ராம், மனைவி சுனிதா ஆகியோர் வாக்குச் சாவடிக்கு வந்தனர்.

    பஞ்சாபில் இன்று முதல் கேஜரிவால் பிரசாரம்:மக்களவைத் தேர்தலையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிநத் கேஜரிவால் வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்காக, அவர் அமிருதசரஸýக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை இரவு புறப்படுகிறார். பஞ்சாபில் பிரசாரம் முடித்துவிட்டு தில்லிக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு திரும்புகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai